குற்றவியல் வழக்கு

எமது நிறுவணம் சிறிய மற்றும் பெரிய வழக்குகள் என பாரபட்சம் பார்க்காது அனைத்துவித குற்றவியல் வழக்குகளுக்கும் வழக்கறிஞர் சேவையை வழங்குவோம். வழக்கறிஞருக்கான செலவுகளை அநேகபட்சத்தில் அரசாங்கம் வழங்கும், இருந்தபொழுதும் இதில் சில விதிவிலக்குகள் உண்டு. பாரதூரமான வழக்குகளில் சந்தேக நபருக்கு கூட அரசாங்கத்தால் வழங்ககறிஞர் செலவு வழங்கப்படலாம்.

செலவுகள் அரசினால் செலுத்தப்படுமா என்ற விடயம் பற்றி நாம் விரைவாக ஆராய்ந்து அறிவிப்போம். அரசாங்கத்தின் செலவில் வழக்கறிஞரை கொண்டிருப்பதற்கு உங்களுக்கு உரிமை இல்லாத பட்சத்திலும் கூட ஓர் வழக்கறிஞர் ஊடாக உங்களது வழக்கை ஆராய்ந்து கொள்வது பயனுள்ளதாக அமையலாம்.

அதிவேக வாகன ஓட்டம், போதையில் வாகன ஓட்டம் அல்லது இது போன்ற வேறு காரணங்களால் சாரதி பத்திரம் மற்றும் / அல்லது தொழில் வாகன ஓட்டி அனுமதி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டிருந்தால் இது விடயமாக மேல்முறையீடு / விண்ணப்பம் போன்ற விடயங்களிலும் நாம் உதவி செய்வோம்.

சிறுவர் நலன் பேணல் சட்டம்

சிறுவர் நலன் பேணல் விடயங்களில் நாடு பூராண உதவியை மூர்த்தி வழக்கறிஞர் நிறுவனம் பெற்றோர்களுக்கும் அல்லது வழக்கறிஞருக்கான உரிமை கொண்ட பதினைந்து வயதை அடைந்த பிள்ளைகளுக்கும் வழங்குகிறது. இவ்வகையான சிறுவர் நலன் பேணல் வழக்குகளின் போது விரைவாக விடயத்தின் ஆரம்பத்தில் இருந்தே வழக்கறிஞரை ஈடுபடுத்திக் கொள்வது நன்மை பயக்கும்.

சிறுவர் நலன் பேணல் சேவையின் அதிகார தீர்மானிப்புக்கள், பராமரிப்பு கைமாற்ற விடயங்கள், பராமரிப்பை மீண்டும் பெற்றோரிடம் கையளிக்கும் விடயங்கள், சந்திப்பு ஏற்பாடுகள் போன்ற விடயங்களில், பெற்றோர்களுக்கு அல்லது வழக்கறிஞருக்கான உரிமை கொண்ட பதினைந்து வயதை அடைந்த பிள்ளைக்கு வழக்கறிஞர் உதவியை அரசாங்கத்தின் செலவில் எமது நிறுவனம் வழங்கும்.

இவ்வகையான வழக்குகளில்எவ்வகையான உரிமைகளை ஒருவர் கொண்டுள்ளார் அத்தோடு எது சிறந்த ஓர் தீர்வாக அமையும் என்பவற்றை அறிந்து வைத்திருப்பது ஓர் இலகுவான விடயம் அல்ல. இது விடயமாக செலவின்றி உரையாடி ஆராய்வதற்கு எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.

பாதிக்கப்பட்ட பிரதிநிதித்துவம்

ஒரு குற்றவியல் குற்றம் உறுதிசெய்யப்பட்ட சில சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்ட அல்லது அவரை சுற்றியுள்ள நபருக்கும் அவரின் ஆர்வங்களுக்கும் மூர்த்தி நிறுவனத்தின் செயல்முறை முழுவதாலும் முன்வைக்கவும் உதவும், அவர்கள் குற்றவியல் விசாரணை முழுவதும் உங்கள் நலன்களை உதவுவார்கள் மற்றும் பாதுகாக்கிறார்கள். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சில சட்ட உரிமைகள் உள்ளன. மூர்த்தியின் குற்றவியல் செயல்முறை முழுவதும் உங்கள் நலன்களை பாதுகாக்க முடியும்

ஒரு பாதிக்கப்பட்டவராக, மூடிய கதவு அமர்வுகள் உட்பட விசாரணை மற்றும் பிரதான விசாரணையின் போது அனைத்து நீதிமன்ற அமர்வுகளுக்கும் நீங்கள் செல்லலாம். காவல்துறை மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு முன்னேற்றங்கள் பற்றியும், அவர்களின் விசாரணைகள் மூலம் உருவாக்கப்பட்ட ஆவணங்களைப் பார்க்கவும் உங்களுக்கு உரிமை உண்டு. எங்கள் நிறுவனம் குற்றம் பாதிக்கப்பட்டவர்களுக்கு குற்றவியல் விசாரணை செயல்முறை போது தங்கள் இழப்பீடு கோரிக்கைகள் முன்வைக்க உதவ தயாராக உள்ளது .

குடும்ப வழக்குகள்

கூடி வாழுவோர் ஒப்பந்தம், தாம்பத்திய ஒப்பந்தம், விவாகரத்து அத்தோடு கூட்டு வாழ்க்கையில் இருந்து பிரிதல் ஆகிய விடயங்களில் ஒப்பந்தங்களை தயாரிப்பதில் இருந்து அனைத்து விதமான ஏனைய சட்ட ரீதியான உதவிகளுக்கும் நீங்கள் எமது நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்.