எமது சாதாரண மணி நேர விலை Kr. 1500 + MVA ஆகும். எவ்வகையான விடயத் துறை, விடய அளவு அத்தோடு நேரப் பிரயோகம் ஆகியவற்றை பொருத்து மணி நேர விலை மாறுபடலாம். கட்டணத்திற்கான நேரம் கணிப்பீடு செய்யப்படும் பொழுது 15 நிமிடங்களை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும்.
ஓர் குற்றவியல் வழக்கில் தனது வழக்கறிஞராக எவரை நியமித்துக்கொள்வது என்பதை நீங்களாகவே தெரிவு செய்யலாம். உங்களுக்கு என சந்தர்ப்பத்தில் ஓர் வழக்கறிஞர் அத்தருணத்தில் அவசரமாக நியமிக்கப்பட்டாலும் பின்னர் எத்தருணத்திலும் செலவு ஏதும் உங்களது பொறுப்பில் இல்லாது நீங்கள் விரும்பிய வழக்கறிஞரிடம் வழக்கை கையளிக்கலாம்.
அநேகமான சந்தர்ப்பங்களில் உங்களது வழக்கறிஞருக்கான செலவீனங்களை அரசாங்கமே செலுத்துவதற்கான வாய்ப்பு உண்டு. நீங்கள் ஓர் குற்றவியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றத்திற்கு சமூகம் அளித்து வழக்காடவேண்டிய நிலவரம் வந்தால், அல்லது உங்களை கைது செய்து 24 மணித்தியாளங்களுக்கு மேலாக உங்களை தடுப்புக்காவலில் வைத்திருந்தால் இவ்வகையான உரிமை உங்களுக்கு உண்டு. ஓர் குற்றவியல் வழக்கில் நீங்கள் குற்றம் சுமத்தப்பட்டவராக இருந்தால் அநேகமான சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் செலவில் வழக்கறிஞரை நியமித்துக்கொள்ளும் உரிமை உங்களுக்கு இருக்கலாம்.
அரசாங்கத்தின் செலவில் ஓர் வழக்கறிஞரை நியமித்துக்கொள்ளும் உரிமை உங்களுக்கு இல்லாதபட்சத்தில் எமது வழமையான மணி நேர விலை பிரயோகிக்கப்படும்.
இலவச சட்டஉதவி சட்டத்தின் பிரகாரம் சட்ட உதவி தேவைப்படும் ஓர் நபருக்கு அதிக வருமானமோ சொத்து பெருமதிகளோ இல்லாத பட்சத்தில், குறித்த சில விடயங்களில் வழக்கறிஞரின் கட்டணத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அரசாங்கத்தின் செலவில் பெற்றுக்கொள்ளும் உரிமை உண்டு.
வழக்கறிஞருடன் தொழில் ஒப்பந்தத்தை கையெழுத்து இடுவதற்கு முன்னர் இலவச சட்ட உதவி உரிமையை நீங்கள் கொண்டுள்ளீர்களா என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்வதற்கான உதவியை நாம் வழங்குவோம்.
எந்த வித விதிமுறைகள் கட்டுப்பாடுகள் இணைப்புகள் இன்றி தொடர்பு கொள்ளலாம் எம்முடன்